ஒவ்வொரு நாளும் கூகுள் தரும் அறிவிப்புகள் இணைய உலகில் புரட்சி ஏற்படுத்துபவை என்று கூறினால் மிகையாகாது. இப்பொழுது நான் கூற போகும் செய்தி software developers எனப்படும் மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்குரியது. இது வரை மென்பொருளை உருவாக்குபவருக்கு 30 முதல் 50 சதவீதம் வரை பங்கு கிடைத்தது.... பிறகு வந்த APPLE இதையே மாற்றி அமைத்தது.30 சதவீதத்தை தான் வைத்து கொண்டு 70 சதவீத பங்கை அதை உருவாக்கியபவர்களுக்கே வழங்கியது.ஆனால் இப்பொழுது GOOGLE அதையும் தாண்டி 95 சதவீத வருவாயை மென்பொருளை வடிவமைத்தவர்களுக்கே அளிக்க முடிவு எடுத்துள்ளது.இந்த முடிவின் மூலம் திறமைசாலிகளை தன் பக்கம் ஈர்த்துள்ளது.இது இணைய உலகில் ஒரு மிக பெரும் புரட்சிக்கு வழிவகுத்துள்ளது. GOOGLE இன் இந்த முடிவு பெரும் ஆச்சர்யங்களை தோற்றுவித்துள்ளது.
No comments:
Post a Comment